4447.

          ஓசையின் உள்ளேஓர் ஆசை உதிக்கமெல்
          ஓசைசெய் வித்தீரே வாரீர்
          பாசம் அறுத்தீரே வாரீர். வாரீர்

உரை:

     பொதுவாக எங்கும் நிலவும் ஓசைக்குள் கேட்பார் விரும்பத் தக்க இனிய மெல்லிய இசை யொலியை அமைத்துள்ளமை பற்றி, “ஆசை யுதிக்க மெல்லோசை செய்வித்தீர்” என்று மொழிகின்றார். ஓசை - பொது. ஒலி - சிறப்பு. ஓசை யொலியெலாம் ஆனாய் நீயே” என்பர் திருநாவுக்கரசர். பாசம் - மலமாயை கன்மங்கள்.

     (95)