4449. ஓடாது மாயை நாடாது நன்னெறி
ஊடா திருஎன்றீர் வாரீர்
வாடா திருஎன்றீர் வாரீர். வாரீர்
உரை: மாயா காரியமாகிய உலகியலைத் தொடர்ந்து செல்லாமலும், அதனை நினையாமலும் சன்மார்க்கமாகிய நன்னெறிக்கு மாறுபடாது ஒழுகுக என்றற்கு, “ஓடாது மாயையை நாடாது நன்னெறி ஊடாது இரு” என உபதேசிக்கின்றார். ஊடுதல் - மாறுபடுதல். (97)
|