4450.

          ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள்
          ஓலக்கங் காட்டினீர் வாரீர்
          காலக் கணக்கில்லீர் வாரீர். வாரீர்

உரை:

     ஓலக் கபாடம், துவாத சாந்தத்தின் கீழ்நிலையாகிய தலைக்குள் அமைந்த உபசாந்தம். துவாத சாந்தக்காட்சி “திருவருள் ஓலக்கம்” எனப்படுகிறது. ஓலக்கம் - சபை. காலக் கணக்கில்லீர் கால வரம்புக்குட்படாதவரே.

     (98)