4451. ஓடத்தில் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
யூடத்தைக் காட்டினீர் வாரீர்
வேடத்தைப் பூட்டினீர் வாரீர். வாரீர்
உரை: ஓடம் - ஓடும் இயல்புடைய உடம்பு. மாடம், தலையோட்டின் உள்ளிடம்; அதனை யோகியர் உபசாந்தம் என்பர். மெய்யூடு அத்தைக் காட்டினீர், உடம்பின்கண் மூலாதார முதலாக வுள்ள ஆதாரங்களின் வழியாகச் செலுத்தித் துவாத சாந்தத்தின் எல்லையைக் காட்டினவரே. அத்து - எல்லை. வேடம் - சிவக் கோலம். (99)
|