4452.

          ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை
          ஓமத்தன் ஆக்கினீர் வாரீர்
          சாமத்த நீக்கினீர் வாரீர். வாரீர்

உரை:

     நடுச் சாமத்தில் ஓமத்தில் எனை ஓமத்த னாக்கினீர், நள்ளிரவு உறக்கத்தில் வியோமமாகிய அருள் வெளியில் என்னைப் பிரணவாகார வுருவில் ஒன்றுவித்தீர். வியோமம் - ஓமம் என வந்தது. ஓமத்தன் - ஓம் என்பதன் பொருளாகியவன்.

     (100)