4453. ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
ஊமென்று காட்டினீர் வாரீர்
நாமென்று நாட்டினீர் வாரீர். வாரீர்
உரை: ஓம் என்பதன் உள்ளீடாகிய அகர உகர மகரங்களில், அகரம் சிவத்தையும், உகரம் அருளையும், மகரம் உயிரையும் குறிக்கும் எனச் சான்றோர் உரைப்பதால், “நாம் என்று காட்டினீர்” என நவில்கின்றார். ஓம் என்பதற்கு முன் அகரமும் உகரமும் நிற்றலின், அவற்றை “ஆம் என்று உரைத்து உடன் ஊம் என்று காட்டினீர்” என உரைக்கின்றார். அம் ஆம் எனவும், உம் ஊம் எனவும் செய்யுட் கேற்ப நீண்டன. (101)
|