4456.

          கண்டனைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
          கண்மணி யீர்இங்கு வாரீர்
          உண்மணி யீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     காதல் - மிக்க அன்பு; ஆர்வம் எனினும் பொருந்தும். கண்மணியீர் - கண்ணின் மணி போன்றவரே. உண்மணியீர் - மனமாகிய மணியில் எழுந்தருள்பவரே, “வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக” (நேரிசை) எனத் திருநாவுக்கரசர் குறிப்பது காண்க.

     (104)