71. அம்பலவாணர் ஆட வருகை

சிந்து

    அஃதாவது, ஆயமகளிரும் தோழியரும் தானுமாகக் கூடியிருந்து, விளையாடுதற்குத் தலைவனை வருக என வேண்டி யழைத்தலாம். அம்பலத்தின்கண் திருநடம் புரியும் இயல்பினனாதலின் விளையாடற்கு வருக எனத் தலைவி வேண்டுகின்றாள்.

பல்லவி

4458.

     ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
     அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.

உரை:

     ஆடல், கூடி மகிழ்ந்து விளையாடுதல்; கூடி வாழ்தலுமாம்.