4466. பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
பின்பாட்டுக் காலையிேத ஆடவா ரீர்
ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
சாதலறுத் தெனையாண்டீர் ஆடவா ரீர்
தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
உரை: பேதம் - மக்கள் தேவர் என்ற வேறுபாடு; விஞ்ஞானாகலர், பிரளயாகலர், சகலர் என்ற வேறுபாடுமாம். ஓத வுலவாதவர் - முற்றவும் சொல்லி முடிக்க வொண்ணாத பெருமை யுடையவர். ஏத மறுத்தவர் - காம வெகுளி மயக்க மென்னும் மூவகைக் குற்றங்களையும் நீக்கினவர். (8)
|