4468.

     நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
          நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
     விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
          வியந்துரைத்த தருணமிே­த ஆடவா ரீர்
     எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
          எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
     இச்சைமய மாய்இருந்ே­தன் ஆடவா ரீர்
          என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்

உரை:

     நச்சுகின்றேன் - விரும்புகின்றேன். நிச்சல் - நாடோறும். விச்சை - ஞானம். எச்சுகமும் - எல்லா இன்பங்களும். இச்சை - காதல்.

     (10)