4477.

     அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
          அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
     துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
          துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
     பின்பாட்டுக் காலையிே­த அணையவா ரீர்
          பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
     என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
          என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

உரை:

     அன்பாட்டு - அன்பர் பொருட்டு அம்பலத்தில் ஆடுதல். துன்பாட்டு - துன்பம் தரும் செயல்கள். துரிய நிறை பெரியவர் - உந்தித்தானமாகிய துரிய நிலையில் ஆன்மாக்கட்குக் காட்சி தரும் பெருமையுடையவர். பின்பாட்டுக் காலை - பின்னின்று பாடிப் பரவும் காலம். பின்னிற்றல் வழிபாட்டு முறை. பிச்சு - பித்து; அஃதாவது பெருங்காதல்.

     (7)