4478.

     அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
          ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணைவா ரீர்
     புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
          பொன்மேனிப் புண்ணியரே அணைவா ரீர்
     வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
          மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
     இரைக்கணவு தருணமிே­த அணையவா ரீர்
          என்னுடைய நாதரே அணையவா ரீர். அணையவா ரீர்

உரை:

     உம்மேல் ஆணையாக வேண்டுகின்றேன்; என்னை அணைதல் வேண்டும் என்பாளாய், “ஆணையும் மேல் ஆணை என்னை அணைய வாரீர்” என்று முறையிடுகின்றாள். புரைக்கணம் - குற்ற வகைகள். வரைக்கணம் - மலைகளின் கூட்டம். மன்று, சபை. இரைக்கணவு தருணம் - போக நுகர்ச்சிக்குத் தக்ககாலம். அணவுதல் - நெருங்குதல்.

     (8)