பல
பல்லவி எடுப்பு
4483. திருவார்பொன் னம்பலத்ேத செழிக்குங்குஞ் சிதபாதர் வருவார்
சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்.
உரை: திரு - கண்டார் விரும்பும் அழகு. குஞ்சித பாதர் - வளைந்த திருவடியை யுடையவர். ஒரு பாதம் முயலகன் முதுகில் ஊன்றி விளங்க - ஒரு பாதம் ஆடற் பொருட்டு வளைந்து தோன்றுதலாற் “குஞ்சிதபாதர்” என்கிறாள். போதர் - ஞான மூர்த்தி, சபாநாதர், சபைக்குத் தலைவர். (2)
|