கண
கண்ணிகள்
4484. சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
உரை: சிவானந்தமாகிய மதுவை யுண்பவர், அறிவு மயங்காமல் தெளிந்த சிவஞானம் பெறுவர் என்பாளாய், “சிவானந்த மது வுண்டு தெளிந்தோர்” என்றும், அத் தெளிவின் பயனாக அவர் அனைவரும் சிவஞானத் திருத்தொண்டு மேற்கொள்வர் என்பாளாய், “தெளிந்தோர் எல்லோரும் தொண்டு செய்ய” என்றும் இயம்புகின்றாள். பவுரி - கூத்து. இந்த வெளி - சிதம்பர சபை. அங்கே - வடலூரில். பெருவெளி - பெரிய ஞான சபை. (3)
|