கண

கண்ணிகள்

4489.

     பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
          போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
     அருள்நாட கம்புரியும் கருணா நிதியர்உன்னை
          ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம்
                                        சொல்கின்றதே.என்ன

உரை:

     மன்னர் - முறை புரியும் வேந்தர். உயிர்கள் செய்யும் வினை வகைகட்குரிய பயன்களை அவற்றைச் செய்த உயிரே நுகருமாறு முறை செய்தலின் சிவனை, “மன்னர்” எனவும், தனக்குக் கணவர் என்ற கருத்தால் “நாதர்” எனவும் இயம்புகின்றாள். திருச்சின்னம் - தலைவர்களின் வருகை தெரிவிக்கும் இசைக் கருவி. நாதம் - சின்னத்தின் ஒலி.

     (2)