4490.

     பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
          பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
     ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
          அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம
                                        சொல்கின்றதே.என்ன

உரை:

     பொருள் - பிரமப் பொருளைத் தன்னகத்தே கொண்ட வேதம். தெருள் நான்மறை - ஓதுபவர்க்கு ஞானத் தெளிவு நல்கும் இருக்கு முதலாய நான்கு வேதங்கள். நாடகம் - நடனம். கருணா நிதி - அருட் செல்வர். எக்காளம் - இது தலைவர் வருகை தெரிவிக்கும் மங்கள இசைக் கருவி.

     (3)