4491. எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
மருவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம்
சொல்கின்றதே.என்ன
உரை: எம் தரம் - எம்முடைய தகுதி. ஞான சுந்தரர் - ஞானமே திருவுருவாகக் கொண்ட அழகர். மந்திர மாமன்று - சி்வ ஞான முணர்த்தும் பெரிய அம்பலம். மருவுதல் - கூடுதல். (5)
|