4493. அற்புதப்பே ரழகாளர் சொற்பாதம் கடந்துநின்றார்
அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார்
சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்
சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம்
சொல்கின்றதே.என்ன
உரை: அற்புதப் பேரழகி - வேறு எப்பொருட்கும் இல்லாத தனியழகு. சொற்பதம் - சொற்பொருளின் எல்லை. சிற்பரர் - ஞானத்தால் மேலாயவர். ஓங்கார நாதம் - ஓம் என முடியும் இசை யோசை. (7)
|