75. இவர்க்கும் எனக்கும்

சிந்து

    அஃதாவது, வந்த தலைவனை வரவேற்ற தலைவி, தன் தோழிக்கு இவர் மீண்டும் பிரிந்து செல்லாதவாறு இரட்டைத் தாழிட்டு மனையிற் காவல் செய்க என்று பணித்தலாம்.

பல்லவி

4496.

     இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
          என்றும் தீரா வழக்குக் காண டி.

உரை:

     பெருவழக்கு - எளிதில் முடிபு காண முடியாத பெரிய வழக்கு. என்றும் - எந்நாளும்.

     (1)