4498.

     அன்றிதோ வருகின்றேன் என்று போனவர் அங்கே
          யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை
     இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே
          இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே. இவர்க்கும்

உரை:

     இதோ வருகின்றேன் - இப்பொழுதே வருவேன். இருந்தார் - வாராதிருக்கின்றார். சங்கு - சங்கினாலாகிய கைவளை.

     (3)