4499. அவரவர் உலகத்ேத அறிந்தலர் தூற்றப்பட்டேன்
அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
இவர்சூதை அறியாேத முன்னம் ஏமாந்துவிட்டேன்
இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன் இவர்க்கும்
உரை: அலர் தூற்றப்பட்டேன் - பழிப்புரை சொல்லப்பட்டேன். சூது - வஞ்சனை. முன்னம் ஏமாந்து விட்டேன் - முன்பு இவர் போகார் என்று கருதி ஏமாந்து செல்லுதற்கிசைந்தேன். போக வொட்டேன் - என்னிற் பிரிந்து போக விடேன். (4)
|