பல
பல்லவி எடுப்பு
4502. பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்
பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். இதுநல்ல
உரை: பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே - அம்பலத்தில் உயிர்கட்கு நலம் விளைவிக்கும் திருக்கூத்து ஆட வல்லவராகிய புண்ணிய மூர்த்தியே. தக்க தருணம் எனத் தான் உரைப்பதை வற்புறுத்தற்குப் “பொய் யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன்” என்று தலைவி யுரைக்கின்றாள். (2)
|