4505. கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது
தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இது நல்ல
உரை: கோபம் - சினம். காமம் - பெண்ணாசை. குடிகெடுதல் - நிலையிழந்தழிதல். ஆங்காரம் - ஆணவமாகிய குற்றம். தாபம் - சுருங்குதல். சோபம் - விளக்கம். தத்துவம் - நிலம் முதல் நாதம் ஈறாகவுள்ள தத்துவக் கூறுகள். (5)
|