4510. மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா
வணங்கருணை வைத்ேத மன்றில்
அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம்
எனக்களித்தான் அந்தோ அந்தோ.
உரை: மருட்சோதனை - மனத்தைக் கலக்கி வருத்தும் சோதனை; சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் முதலிய தொண்டர்களைக் கடுஞ் சோதனை செய்த சிவனுடைய மறக் கருணைச் செயல்கள் இங்கே “மருட் சோதனை” எனக் குறிக்கப்படுகின்றன. கருணை - திருவருள். அருட்பெருஞ்சோதிப் பெருமான் - பேரருட் சோதியையுடைய சிவபெருமான். அருளமுதம் - அருளாகிய ஞானத் திருவமுதம். (4)
|