4511.
துன்பமெலாம் ஒருகணத்தில் தொலைத்தருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க அன்புடையான் அம்பலத்தான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
உரை:
துன்பம் - பிறவித் துன்பம். அருட்சோதி - திருவருள் ஞான விளக்கம். அம்பலத்தான் - அம்பலத்தில் ஆடும் சிவபெருமான். (5)
(5)