4512. பந்தமெலாம் தவிர்த்தருளிப் பதந்தருயோ
காந்தமுதல் பகரா நின்ற
அந்தமெலாம் கடந்திடச்செய் தருளமுதம்
எனக்களித்தான் அந்தோ அந்தோ.
உரை: பந்தம் - உலகியற் பற்று. பதம் - சாலோகம், சாமீபம், சாரூபம் சாயுச்சியம் என்ற நால்வகைப் பதங்கள். யோகாந்த முதல் பகரா நின்ற அந்தம், கலாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்பன. (6)
|