4514. தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென
நினையாமல் சித்தி யான
அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம்
எனக்களித்தான் அந்தோ அந்தோ.
உரை: தினைத்தனையும் - சிறிதளவும். அறிவறியாச் சிறியவன் - பேரறிவாகிய திருவருள் ஞான நலத்தை அறியாத சிறுமையுடையவன். சித்தி - யோக சித்தி, ஞான சித்தி, காரிய சித்தி. (8)
|