4516. மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும்
எதனாலு மாய்வி லாத
அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப் பெற்
றாடுகின்றேன் அந்தோ அந்தோ.
உரை: மருள் வடிவு - தோன்றி நின்று மறைந்து மாயும் பொருளும் அவற்றின் தோற்றங்களும். ஆய்வில்லாத அருள் வடிவு - ஆராய்தற் கிடந்தராத மெய்யருளுணர்வு. இம்மை - இப்பிறவி. (10)
|