4517.

     எக்கரையும் காணாே­த இருட்கடலில்
          கிடந்ே­தனை எடுத்தாட் கொண்டு
     அக்கரைசேர்த் தருளெனுமோர் சர்க்கரையும்
          எனக்களித்தான் அந்தோ அந்தோ.

உரை:

     எக்கரை - எத்தகைய எல்லையும். இருட் கடல் - மலத்திருள்களால் உண்டாகும் அஞ்ஞானமாகிய கடல். அக்கரை - அருள் ஞான நிலை. சர்க்கரை - இன்ப நிலை.

     (11)