78. ஞான மருந்து

சிந்து

பல்லவி

4518.

     ஞான மருந்திம் மருந்து - சுகம்
          நல்கிய சிற்சபா நாத மருந்து.

உரை:

     ஞான மருந்து - சிவஞானமாகிய மருந்து. சிற்சபா நாத மருந்து - ஞான சபைக்குத் தலைவனாகிய மருந்து.

     (1)