கண
கண்ணிகள்
4519. அருட்பெருஞ் ஜோதி மருந்து - என்னை
ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து
பொருட்பெரும் போக மருந்து - என்னைப்
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. ஞான
உரை: அருட்பெருஞ்சோதி மருந்து - திருவருட் பேரொளியாகிய மருந்து. ஐந்தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். அளித்த மருந்து - அருள் புரிந்த மருந்து என்றாலும் ஐந்தொழில் புரிவது சிவம் என்னும், சிவானுபவம் ஒன்றிற்கே உரியது சீவன் என்றும் சித்தாந்திகள் கூறுவர். பொருட் பெரும் போகம் - பொருளாகக் கலந்து நுகர்தற்குரிய சிவபோகம். புணர்தல் - கலத்தல். (2)
|