4520. எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள்
என்றும் விடாமல் இனிக்கு மருந்து
சொல்லால் அளவா மருந்து - சுயஞ்
ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து. ஞான
உரை: விடாமல் - நீங்காமல். சொல்லால் அளவா மருந்து - சொல்லின் எல்லைக்குள் அடங்காத மருந்து. சுயஞ் சோதி - இயற்கை யொளி. (3)
|