4521.

     காணாது காட்டு மருந்து - என்றன்
          கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து
     ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது
          வாகி மணிமன்றில் ஆடு மருந்து. ஞான

உரை:

     காணாது காட்டும் மருந்து - காண்பவனும் காணாவகை யுண்ணின்று காணச் செய்யும் மருந்து. பொற் கங்கணம் - பொன்னாலாகிய வளை. உயர்திணை ஆணாகவும் பெண்ணாகவும், அஃறிணை யதுவாகவும் இயைந்து ஞான சபையில் நின்று நடம் புரிதலால் சிவனை, “மணி மன்றில் ஆடும் மருந்து” எனக் கூறுகின்றார்.

     (4)