4522.

     சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
          சோதி மலையில் துலங்கு மருந்து
     சித்துரு வான மருந்து - என்னைச்
          சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. ஞான

உரை:

     மருந்துகளை மலைக் காடுகளில் பெறும் மரபுபற்றி அருட் சோதியை மலையாக உருவகம் செய்து, “அருட்சோதி மலையில் துலங்கும் மருந்து” என்று சொல்லுகிறார். துலங்குதல் - விளங்குதல். சித்துரு - ஞான வடிவம். சித்தெல்லாம் - அணிமா மகிமா முதலிய சித்துக்கள்.

     (5)