4524.

     நாதாந்த நாட்டு மருந்து - பர
          ஞான வெளியில் நடிக்கு மருந்து
     போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள்
          பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து. ஞான

உரை:

     நாதாந்த நாடு - நாத தத்துவத்துக்கு மேலுள்ள வெளி. பரஞான வெளி - பாசபசு ஞானங்கட்கு மேலதாகிய பதிஞான வெளி. போதாந்தர் - சுத்த சிவஞானிகள்.

     (7)