4526.

     ஆறந்தத் தோங்கு மருந்து - அதற்
          கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து
     ஊறந்த மில்லா மருந்து - எனக்
          குள்ளே கலந்த உறவா மருந்து. ஞான

உரை:

     ஆறந்தம் - நாதாந்தம், போதாந்தம், முதலாகவுள்ள அந்தங்கள் ஆறு. ஊறந்தம் - நோய் செய்வதும் கெடுவதும். இல்லா மருந்து - இல்லாததாகிய சிவஞான மருந்து.

     (9)