4527. என்னுயிர்க் கன்பா மருந்து - கலந்
தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து
என்னுயிர் காக்கு மருந்து - என்றும்
என்னுயி ராகிய இன்ப மருந்து. ஞான
உரை: உயிர் காக்கும் மருந்து - உயிரறிவை நன்னெறிக்கட் செலுத்தும் மருந்து. என்றும் - எக்காலத்தும். உயிராம் மருந்து - உயிர்க்குயிராய் அருளும் மருந்து. (10)
|