4528.

     என்னறி வுட்கொள் மருந்து - என்றும்
          என்னறி வாகி இலங்கு மருந்து
     என்னறி வின்ப மருந்து - என்னுள்
          என்னறி வுக்கறி வென்னு மருந்து. ஞான

உரை:

     என்னுடைய அறிவைத் தன்னுட் கொண்டு, தானே எனது அறிவாயும் அறிவுக்கறிவாயும் இன்பமாயும் இருப்பது என்பது கருத்து.

     (11)