4529.

     என்குரு வான மருந்து - என்றும்
          என்தெய்வ மாகி இருக்கு மருந்து
     என்அன்னை யென்னு மருந்து - என்றும்
          என்தந்தையாகிய இன்ப மருந்து. ஞான

உரை:

     எனக்குத் தாயும் தந்தையும் குருவும் தெய்வமுமாகிய மருந்து என்பதாம்.

     (12)