4530.

     என்பெரு வாழ்வா மருந்து - என்றும்
          என்செல்வ மாகி இருக்கு மருந்து
     என்னுயிர் நட்பா மருந்து - எனக்
          கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து. ஞான

உரை:

     எட்டெட்டுச் சித்தி - எண் வகையெனப் பலகாலும் ஓதப்படும் சித்தி வகை.

     (13)