4531.

     என்னிறை யான மருந்து - மகிழ்ந்
          தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து
     தன்னறி வாகு மருந்து - என்னைத்
          தந்த மருந்தென்றன் சொந்த மருந்து. ஞான

உரை:

     என் இறையான மருந்து - எனக்கு இறைவனாகிய மருந்து. என் மேனியையும் தனது பொன்னிறம் பெறுவிக்கும் சிவமெனப்படும் மருந்து.

     (14)