4532.

     உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
          உயிருக் கனாதி உறவா மருந்து
     தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
          சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து. ஞான

உரை:

     உள்ளத்தின் உள்ள மருந்து - உள்ளத்தை இடமாகக் கொண்ட மருந்து. உயிர்க்கும் சிவனுக்குமுள்ள தொடர்பு - அனாதி சம்பந்தம் என்பது கருத்து. தெள்ளத் தெளிக்கும் மருந்து - மிக்க தெளிவான மருந்து. சிவாய மருந்து - சிவமும் திருவருளும் உயிருமாகிய மருந்து

     (15)