4533.

     மெய்ப்பொரு ளென்னு மருந்து - எல்லா
          வேதா கமத்தும் விளங்கு மருந்து
     கைப்பொரு ளான மருந்து - மூன்று
          கண்கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து. ஞான

உரை:

     வேதாகமத்தும் விளங்கும் மருந்து - வேதங்களிலும் ஆகமங்களிலும் விளக்கப்படும் மருந்து. கைப்பொருள் - கைவசமாகும் மருந்து. மூன்று கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து - மூன்று கண்களைக் கொண்ட சிவனாய் என் கண்ணுக்குள் உறையும் ஒளியாய் விளங்கும் மருந்து.

     (16)