4534. மதியில் விளைந்த மருந்து - யார்க்கும்
மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்து
கதிதரும் இன்ப மருந்து - அருட்
கண்ணால்என் றன்னைக் கலந்த மருந்து. ஞான
உரை: மதி - உண்மை ஞானம். யார்க்கும் மதிக்கப்படாத பொன் வண்ண மருந்து - எவராலும் மாற்றுக் காணமாட்டாத பொன்னின் நிறத்தையுடைய மருந்து. கதி - சிவகதி. அருட் கண்ணால் - அருள் ஞானப் பார்வையால். (17)
|