4535. கற்பூர ஜோதி மருந்து - பசுங்
கற்பூர நன்மணங் காட்டு மருந்து
பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற்
போதம் தவிர்த்தசிற் போத மருந்து. ஞான
உரை: கற்பூர சோதி - கற்பூரத்தில் ஒளி. பொற்பூ - பொன்னாலாகிய மலர். தற்போதம். நான் என்னும் அகங்காரம்; இதனைப் பசுபோதம் என்றும் கூறுவர். போத
மருந்து - ஞான மருந்து. (18)
|