4536. மேலை வெளியா மருந்து - நான்
வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
சாலை விளக்கு மருந்து - சுத்த
சமரச சன்மார்க்க சங்க மருந்து. ஞான
உரை: மேலை வெளி - தத்துவாதீதமாகிய பரவெளி. சாலை - வடலூரில் உள்ள அறச்சாலை. சமரச சன்மார்க்க சங்கம் - வேற்றுமையுணர்வின்றி மெய்ப்பொருள் கண்டுணர்ந்து பொது நெறியை மேற்கொண் டொழுகும் சங்கம். சத்மார்க்கம், சன்மார்க்கமாயிற்று. சத்து - மெய்ப்பொருள். (19)
|