4537.

     என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே
          இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து
     துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட்
          சோதியால் என்னைத் துலக்கு மருந்து. ஞான

உரை:

     சீவனாகிய என்னைச் சிவமாக்கும் மருந்து என்பாராய், “என்னைத் தானாக்கும் மருந்து” என்று கூறுகிறார். துன்னும் மெய்ச் சோதி - மெய்ம்மை யொளி திகழும் சிவம். அருட் சோதி - திருவருள் ஒளி.

     (20)