4538. பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப்
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து
கையிற் கிடைத்த மருந்து - சிவ
காமக் கொடியைக் கலந்த மருந்து. ஞான
உரை: கையிற் கிடைத்த மருந்து - மெய்யாகக் கைக் கொண்ட சிவமாகிய மருந்து. சிவகாமக் கொடி - சிவகாம வல்லியாகிய உமாதேவி. (21)
|