4540. வானடு வான மருந்து - என்னை
மாமணி மேடைமேல் வைத்த மருந்து
ஊனம் தவிர்த்த மருந்து - கலந்
துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து. ஞான
உரை: ஞான வானத்தின்கண் நடுநாயகமாய் விளங்குவது என்றற்கு, “வானடு வான மருந்து” என வழங்குகிறார். மாமணி மேடை - சிவஞான பீடம். ஊனம் - குற்றம். உண்மை மருந்து - சத்தாகிய சிவம். (23)
|