4541. மலையிலக் கான மருந்து - என்றன்
மறைப்பை தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து
கலைநலம் காட்டு மருந்து - எங்கும்
கண்ணாகிக் காணும் கனத்த மருந்து. ஞான
உரை: தெளிவாகக் காணத்தக்க மருந்து என்பார், “மலையிலக்கான மருந்து” என்கின்றார். யாவரும் தெளிவாகக் காண்பதை, “மலை யிலக்கு” என்பது வழக்கு. மறைப்பு - மலமறைப்பு. மெய் வாழ்க்கை - அருள் வாழ்வு. கனத்த மருந்து - பெருமை சான்ற மருந்து. (24)
|